பெற்றோர்களை போல ஏமாளிகள் எவருமில்லை!

ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் வாங்கிவிட்டு கோவில் கற்பகிரகத்திற்கு சென்று இறைவன் தரிசனம் கொடுக்கும்போது கண்ணை மூடிக்கொள்வேன் ! இறைவனை கண்ணார தரிசனம் செய்யமாட்டேன்!
ஸ்கூலுக்கு செல்வேன் ! எனக்காக படிக்கமாட்டேன்! ஸ்கூலுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் படிப்பேன்!
நான் பெரியவனாகி என் பிள்ளையையும் அப்படியே படிக்க வைப்பேன்!
பள்ளியின் வானுயர கட்டடங்களை பார்ப்பேன்! டீவியில் பத்திரிக்கைகளில் என் பிள்ளைகளின் ஸ்கூல் அட்வெர்டைஸ்மென்ட் வந்தால் மார் தட்டிக்கொள்வேன்!

Listen to Saitechinfo FM

ஸ்கூலில் அனுதினமும் எட்டுமணிநேரம் பாடம் பயின்றாலும் வாட்சப்பில் ஹோம்வொர்க் அனுப்பும் ஸ்கூலை தட்டிக்கேட்கமாட்டேன். அதைவைத்து கண்டவற்றையும் பார்க்கும் பிள்ளையை கண்டுகொள்ளவுமாட்டேன்.
படோடாபத்தை பாராட்டுவேன்! பள்ளியில் என் பிள்ளை பாடம் ஒழுங்காக பயின்றானா என்பதையும் அறியமாட்டேன். ஸ்கூல் கடமை தவறாமல் என்றாவது ஒருநாள் நடத்தும் ஓபன் டேயில் என்னையும் என் பிள்ளையையும் ஒரு சேர போட்டுத்துவைக்கும்போது அந்த டீச்சரை பார்த்து அசடு வழிவேன்!
உடனே ஓர் டியூஷனுக்கு என் பிள்ளையை அனுப்புவேன். விட்டது தொல்லை என்று என் வாட்சப்பில் மூழ்கிப்போவேன்! சிறிது காலம் ரிலாக்ஸ்! மறுபடியும் ஸ்கூல் டெஸ்ட் ரிசல்ட்! மார்க் அதைவிட இன்னும் மோசம்! ஸ்கூல் போர்ஷன் வேற! டியுஷன் போர்ஷன் வேற என்று கூலாக என் பிள்ளை சொல்லும் காரணத்தை நம்புவேன். ஆபீஸில் நண்பர் சொல்வதைக்கேட்டு பிராண்டட் பிரைவேட் கோச்சிங் இன்ஸ்டிடூட்டுக்கு அனுப்புவேன். ஆனால் நான் என்றுமே தினமும் என் பிள்ளை என்னதான் படிக்கிறான் என்று அவனிடம் இணக்கமாக பேசியதில்லை. எனக்கு வேண்டுவது நல்ல ரிசல்ட்தான் !
நான் எப்போதும் செய்வது சூஸ் தி பெஸ்ட் தான் ! என்றுமே மேக் தி பெஸ்ட் முயற்சிக்கமாட்டேன். பந்தயக்குதிரைக்கு பணம் கட்டுவதுபோல் பள்ளிப்படிப்பையும் பாவித்துக்கொள்வேன்!

என் ஏமாளித்தனத்துக்கு முடிவே கிடையாதா?
முடிவு உண்டு! வாட்ஸாப்ப் வம்பு உங்களுக்கெதற்கு? உங்கள் மகன் அல்லது மகள் முன்பு ஸ்மார்ட்போனில் சுண்ணாம்பு தடவுவதை தவிர்த்துவிடுங்கள். முதலில் உங்கள் பிள்ளைகளை கவனியுங்கள்.
1) உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் தினமும் என்ன நடக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?
2) பாராளுமன்றத்தில் நடக்கும் நேரலையை கூட நீங்கள் பார்க்கலாம்! ஆனால் ஒரு பள்ளி நிர்வாகத்தில் என்ன நடக்கின்றது என்று எதாவது தெரியுமா?
3) சில பள்ளிகளில் ரிப்போர்ட் கார்டைகூட ஒழுங்காக தெரியப்படுத்துவதில்லை.

4) மாணவன் எவ்வளவு மார்க் எடுத்திருக்கிறான் என்றுதான் போடுவார்களேதவிர அவனுக்கு அளிக்கப்பட்ட அடுத்தடுத்த முயற்சிகள் என்ன என்பதை ஸ்கூல் ரிப்போர்ட் கார்டில் காண முடியுமா?
5) உங்கள் பிள்ளைக்குத்தேவை பேருக்கு ஒரு டார்ச்சர் பண்ணாத ஸ்கூல். மேலும், நன்கு தெரிந்த ஒரு கல்வி வழிகாட்டியாளர் அல்லது கல்விநெறியாளர் !
6) உங்கள் வீட்டருகில் நன்கு படித்த அப்பழுக்கற்ற கல்விநெறியாளர் கிடைத்தால் நீங்கள் பாக்கியசாலி!
7) நீங்கள் ஒரு முக்கோண வடிவ குழுவொன்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதில் உள்ள உறுப்பினர்கள் அம்மா, அப்பா, கல்வி வழிகாட்டியாளர். இக்குழுவின் மைய்யப்புள்ளி உங்கள் பிள்ளை!
8) உங்கள் பிள்ளை தினமும் ஆறுமணி நேரம் கண்டிப்பாக படிக்கவேண்டும்.
9)படிப்பு என்றால் வெறுமனே நியூஸ் பேப்பர் வாசிப்பது போல் இல்லை. எழுதிப்பார்த்தல், வரைந்து பார்த்தல் அவசியம்! அதற்கான டாக்குமெண்ட் அவசியம்.
10) வெட்டியாக வாட்சப் நோண்டுவதை விடுத்து சீரியஸாக உங்கள் பிள்ளைகளின் அகாடெமிக் ட்ராக்கை அப்டேட் செய்யுங்கள்.

11) இனி கார்பொரேட் கல்வி முறையை மட்டும் நம்பி ஏமாறாதீர்கள்! உங்கள் பிள்ளைகளின் கல்விநலனுக்கு நீங்களும், உங்கள் குடும்ப நண்பராக பழகக்கூடிய நல்ல ஒரு கல்விநெறியாளரும்தான் அவசியம்!
12) சாயிடெக்கில் மிக முக்கியமாக இரண்டு விஷயங்களை பகிர்ந்துள்ளோம் ! ஒன்று உங்கள் பிள்ளைகளின் லேர்னிங் ஜர்னல் , மற்றது, சென்டம் சைக்ளிக் யூனிட் டெஸ்ட் ரிசல்ட் அப்டேட் ! இதைப்பற்றி மேலும் அறிய எங்கள் கல்விநெறியாளரை தொடர்புகொண்டு உங்கள் பிள்ளையுடன் நேரில் வந்து ஆலோசனை செய்யவும். நன்றி!

Leave a Reply