நல்லாசிரியர்கள் எளிமையாக நடத்தும் திண்ணைப்பள்ளிக்கூடமா ? பண்ணையார் வர்க்கம் நடத்தும் பண்ணை பள்ளிக்கூடமா ? உங்கள் பிள்ளைகளுக்கு எது வேண்டும் ? பெற்றோர்களே சிந்தியுங்கள் ! Coaching centres உங்கள் பிள்ளைகளுக்கு வேண்டுமா ? வேண்டாமா ?
News
Draft UGC (Minimum Standards of Instructions in the Award of UG and PG Degrees) Regulations 2024:
General Overview:
- Aims to bring flexibility, inclusivity, and interdisciplinarity to higher education.
- Applicable to central, state, private, and deemed universities.
- Aligns with NEP 2020 goals for multidisciplinary and holistic education.
Key Provisions:
1. Biannual Admissions:
- Institutions can admit students twice a year (July/August and January/February).
2. Multiple Entry and Exit:
- Students can enter and exit programs flexibly, with credits recognized for completed coursework.
- Provisions to pursue two UG/PG programs simultaneously.
3. Flexibility in Stream Requirements:
- Students can apply for UG or PG programs outside their prior streams if they qualify through entrance exams (e.g., CUET).
4. Interdisciplinary Learning:
- Option to choose courses across disciplines and earn credits in skill-based and multidisciplinary subjects.
5. Credit System for Degrees:
- Minimum of 50% credits in a discipline required for a major.
- Remaining 50% credits can be earned in multidisciplinary subjects, apprenticeships, or skill courses.
6. Undergraduate and Postgraduate Program Duration:
- UG programs: 3-4 years (flexible durations based on credits and program choice).
- PG programs: 1-2 years.
- Introduction of Accelerated Degree Programmes (ADP) and Extended Degree Programmes (EDP):
- ADP allows completion of degrees in a shorter duration.
- EDP provides extended time for degree completion.
7. Attendance Requirements:
- HEIs to decide minimum attendance requirements based on diverse learning modes and multidisciplinary approaches.
8. Eligibility for Postgraduate Programs:
- Students with 4-year undergraduate degrees in specific disciplines (e.g., BSc Hons., BE/B.Tech) are eligible for 2-year postgraduate programs (e.g., MSc, MTech).
9. ADP and EDP Specifics:
- Up to 10% intake for ADP; no cap for EDP.
- HEI committees to evaluate students’ credit-completion potential.
- Students may opt for ADP/EDP by the end of the first or second semester.
- Curriculum and total credit requirements remain unchanged, with only duration adjusted.
This draft policy reflects a significant shift toward personalized, flexible, and globally competitive higher education in India.
முக்கிய அம்சங்கள் – மசோதா UGC 2024 விதிமுறைகள்
பொது பார்வை:
- உயர்கல்வியில் நெகிழ்வுத்தன்மை, உள்ளடக்கத்தன்மை மற்றும் துறைத்திறன்களை மேம்படுத்த நோக்கமுள்ளது.
- மத்திய, மாநில, தனியார் மற்றும் தன்னாட்சி பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தும்.
- NEP 2020-யின் பல்துறை மற்றும் முழுமையான கல்வி நோக்கங்களை இணைத்துள்ளது.
முக்கிய சீர்திருத்தங்கள்:
1. ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை:
- ஆண்டு இரண்டு முறை (ஜூலை/ஆகஸ்ட் மற்றும் ஜனவரி/பிப்ரவரி) மாணவர்களை சேர்க்க உள்கட்டமைப்பு உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி.
2. பல முறை நுழைவு மற்றும் வெளியேறல்:
- மாணவர்கள் தங்கள் படிப்பை நெகிழ்வாக தொடங்க மற்றும் நிறுத்த அனுமதி.
- ஒரு UG/PG பாடநெறியை ஒரே நேரத்தில் இருமுறை நடத்தும் வசதி வழங்கப்படும்.
3. துறை வரையறை குறைப்பு:
- மாணவர்கள் தங்கள் முன் படித்த துறைக்கு அப்பாற்பட்ட UG அல்லது PG பாடநெறிகளுக்கு சேர முடியும், CUET போன்ற நுழைவுத் தேர்வுகளைத் தாண்டினால்.
4. பல்துறை படிப்பு வாய்ப்பு:
- பல துறைகளில் பாடங்களை தேர்வு செய்து திறன் அடிப்படையிலான மற்றும் பல்துறை பாடங்களில் மதிப்பெண்கள் பெற்றுக்கொள்ளலாம்.
5. பட்டப் படிப்பு மதிப்பெண்கள் (கிரெடிட்ஸ்):
- முதன்மை துறைக்கான UG பட்டத்திற்கான குறைந்தது 50% கிரெடிட்களை மாணவர்கள் சம்பாதிக்க வேண்டும்.
- மீதமுள்ள 50% கிரெடிட்களை பல்துறை பாடங்கள், பயிற்சிகள் அல்லது திறன் அடிப்படையிலான பாடங்களில் பெறலாம்.
6. UG மற்றும் PG பட்ட நிரல்களின் கால அளவு:
- UG: 3-4 வருடங்கள் (படிப்பு மற்றும் கிரெடிட் அடிப்படையில் நெகிழ்வான கால அளவு).
- PG: 1-2 வருடங்கள்.
- வேகப்படுத்திய பட்ட நெறிகள் (ADP) மற்றும் நீட்டிக்கப்பட்ட பட்ட நெறிகள் (EDP) அறிமுகம்:
- ADP: குறைந்த கால அளவில் படிப்பு முடிக்க அனுமதி.
- EDP: நீட்டித்த கால அளவிற்கு படிப்பு முடிக்க அனுமதி.
7. வருகைத் தேவைகள்:
- மாணவர்களின் குறைந்தபட்ச வருகையை HEI-க்கள் தீர்மானிக்கலாம்.
8. PG பட்ட நிரல்களுக்கு தகுதி:
- 4 வருட UG படிப்புகளை முடித்த மாணவர்கள் (e.g., BSc Hons., BE/B.Tech) 2 வருட PG நிரல்களுக்கு (e.g., MSc, MTech) தகுதியானவர்கள்.
9. ADP மற்றும் EDP விவரங்கள்:
- ADP-க்கு 10% சேர்க்கைக்கு அனுமதி; EDP-க்கு வரம்பு இல்லை.
- HEI குழு மாணவர்களின் கிரெடிட்-முடிக்க திறனை மதிப்பீடு செய்து பரிந்துரை வழங்கும்.
- முதல் அல்லது இரண்டாவது செமஸ்டரில் ADP/EDP தேர்வு செய்ய முடியும்.
- பாடநெறி மற்றும் கிரெடிட் தேவைகள் மாறாது, ஆனால் கால அளவு மாறும்.
இந்த மசோதா இந்திய உயர்கல்வியை நெகிழ்வான, தனிப்பயன் மற்றும் உலகத்தரமான கல்வி முறையாக மாற்றுவதற்கு பெரும் வழிவகுக்கும்.
இந்த கல்விச் செய்தியைப் பற்றி, கோச்சிங் வகுப்புகளை கடந்த 40 வருடங்களாக எளிமையுடனும் மிக ஆர்வத்துடனும் நடத்தும் சாய்டெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எ . இராமநாதன் ஐயாவை அணுகினோம் . அவர் கூறிய பதிலை இங்கு தொகுத்து தருகிறோம் .
Discussion
நிருபர் : வணக்கம் டாக்டர் ராமநாதன் சார் . இந்த செய்தியை பற்றி உங்கள் கருத்துக்களை சொல்ல முடியமா ? தமிழ்நாட்டில் பெருவாரியான மீடியாக்கள் இதனை தவறான கண்ணோட்டத்தில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பேரிடியான செய்திகளாக சித்தரிக்கிறார்களே ?
டாக்டர் எ . இராமநாதன் பதில்
வரும் காலங்களில் கல்லூரிகளில் Arts and Science Degree -க்கும் Entrance Exam அவசியம்! அத்தோடு வருடத்தில் இருமுறை கல்லூரி அட்மிஷன் நடக்கும் . இதுதான் செய்தி !
ஆனால் இந்த நல்ல விஷயத்தை நம் தமிழக மீடியாக்கள் பெற்றோர்களையும் மாணவர்களையும் பயமுறுத்தும் வண்ணம் தவறான வதந்தியை பரப்புகிறார்கள் .
இந்த இரண்டு செய்திகளும் நல்லதே !
இருப்பினும் , இந்த நல்ல செய்தியை எப்படி திரித்து வருணிக்கிறார் என்று பாருங்கள் .
பள்ளிகளில் கல்வி சரியில்லை என்பதால்தான் பெற்றோர்கள் கோச்சிங் சென்டருக்கு படை எடுக்கிறார்கள் . பல பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களை வளரவிடுவதில்லை . சாலைதோறும் நல்ல கல்விச்சாலைகள் அமைப்போம் . ஆரம்பிக் கல்வி என்பது திண்ணைபள்ளிகள் போல மாறவேண்டும் . வேலையில்லா பட்டதாரிகள் பலர் யூடியூபிலும் சரி, சுயேச்சையாக டியூஷன் வகுப்பிலேயும் நன்றாக பாடம் நடத்துகிறார்கள் என்பதே உண்மை . பிரைவேட் கோச்சிங் என்றாலே கொள்ளைக்கூட்டம் என்ற தவறான வதந்தியை பரப்பவேண்டாம் . ஏன் , நம் தனியார் பள்ளிக்கூடங்கள் கொள்ளையடிக்கவில்லையா ? எல்லா தொழில்களிலும் கொள்ளையடிப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள் . எடுகேஷனல் கன்சல்டன்ட் என்று சொல்லிக்கொள்ளும் இவருடைய பொய்யான குற்றச்சாட்டை அனுமதிப்பது தவறு . இந்த மீடியாக்கள் இந்த நல்ல விஷயத்தை பெற்றோர்களையும் மாணவர்களையும் பயமுறுத்தும் வகையில் தலைப்பை போட்டு தவறான கருத்தை புகுத்தாமலிருப்பது நல்லது . Entrance exam பள்ளிக்கல்வி வரை தேவையில்லை . ஆனால் தொழில் என்று வரும்போது அட்வான்ஸ் படிப்புகளில் அல்லது கல்லூரிகளில் Entrance exam அவசியம்தான் . பள்ளிக்கல்வியை பிள்ளைகளுக்கு பாரமாக ஆக்கிவிட்டார்கள் . அவரவர் தேவைக்குத்தான் அவரவர் படித்து முயற்சி செய்யவேண்டும் . இப்போதிருக்கும் பெரிய பள்ளிகளை research centre ஆக மாற்றிக்கொள்ளட்டும் . அதற்கான research வசதியை மேம்படுத்தட்டும் . சாதாரணமாக பள்ளிகளில் Maths, Science , Social Science, English and mother tongue போன்ற பாடங்களை பெற்றோர்கள் தங்கள் வீட்டருகிலுள்ள தெருவில் ஒவ்வொரு திண்னை பள்ளிகளிலும் , அதாவது நன்கு படித்தவர் நடத்தும் டியூஷன் வகுப்பில் சொல்லித்தரலாமே ? பள்ளியில் எதற்கு நீச்சல் குளம் , ஆட்டம் , பாட்டம் , கும்மாளம் , digital class, school bus, school van? ஏன் இந்த வெட்டி பந்தா ? பெற்றோர்களே சற்று சிந்தியுங்கள் . உங்கள் குழந்தைகளை சாதாரணமான பள்ளிகளில் சேருங்கள் . நல்ல படித்த நபரிடம் கோச்சிங் வைத்துக்கொள்ளுங்கள் . அட்வான்ஸ் படிப்பில் பெரிய கல்லூரிகளில் போட்டியிட்டு உங்கள் குழந்தைகள் கவுரவத்துடன் வருவார்கள் !
ஒரு நல்லாசிரியரிடம் சென்று அக்கால திண்ணைப்பள்ளிக்கூடம் முறையில் ஆரம்பக்கல்வி பெறுவதுதான் சிறந்தது !