அரேகா பாம் செடி
தற்போதைய கொரோனா காலத்தில், எங்குபார்த்தாலும், இப்போது ஆக்சிஜன் தேவையைப்பற்றி மக்கள் அனைவரும் உணர ஆரம்பித்துவிட்டனர். ஆக்ஸிஜனேட்டர்கள் மற்றும் காற்று சுத்திகரிப்பான்கள் பாளர்கள் போன்ற கருவிகள் மூலம் ஆக்ஸிஜனை அதிகரிப்பதற்கான பல்வேறு முறைகள் இருந்தாலும், உடல் மற்றும் மனதிற்கு நன்மை பயக்கும் காற்றின் தரத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு இயற்கை மாற்றுகள் உள்ளன. நாம் வசிக்கும் வீடுகளில் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் சூழலை வளர்க்க வேண்டும். வீட்டிற்குள்ளே ஆக்ஸிஜனை அதிகரிப்பதற்கான சில தாவரங்களில் அரேகா பாம் செடி மிகச்சிறந்த ஒன்று.
அனைத்து தாவரங்களையும் போலவே, அரேகா பாம் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. மேலும், இச்செடி, ஃபார்மால்டிஹைட், சைலீன் மற்றும் டோலுயீன் போன்ற ஆபத்தான இரசாயனங்களை அகற்றி, சுற்றுப்புற சூழ்நிலையை சுத்திகரிக்கும் திறன் பெற்றுள்ளது.
அரேகா பாம் மங்கிய ஒளியில் நன்றாக வேலை செய்கிறது. மற்றும் இச்செடிக்கு, அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு நபருக்கு, நம் தோள்பட்டை உயரம் வரை வளர்ந்துள்ள நான்கு தாவரங்கள் போதுமானதாக இருக்கும். மறைவான சூரிய ஒளி படும் வரவேற்பறையில் இச்செடியை வைக்கலாம்.