அதிவீர ராம பாண்டியர் இயற்றிய காசிக்காண்டம்.
நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை அருமையாக பாடியுள்ளார் இப்பாடலாசிரியர்.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்து நன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
அதிவீர ராம பாண்டியர் இயற்றிய காசிக்காண்டம்.
பாடலாசிரியர் குறிப்பிடும் ஒன்பது வகை பண்புகள்
- வியந்து உரைத்தல்
- இனிமையாக பேசுதல்
- முகமலர்ச்சியுடன் நோக்குதல்
- வருக என வரவேற்றல்
- எதிரில் நிற்றல்
- மகிழும்படி பேசுதல்
- அருகிலே அமர்ந்து கொள்ளுதல்
- விடைபெறும்போது வாசல் வரை பின்தொடர்ந்து செல்லுதல்
- புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்பி வைத்தல்.