Varnashram in Blood

இரத்தத்திலேயே வர்ணாசிரமம்

முனைவர் எ. இராமநாதன்

“குருதியில் வர்ணாசிரமம்
குந்தியிருப்பதை கவனியும்
சிவப்பணு வைசியனாக ஆற்றல்தர,
வெள்ளையணு காவலாளி சத்ரியனாக

தட்டுக்கள் சூத்திரனாக காயம் குணமாக,
ஆக்சிஜனாக பிராமணன் ஆவி நலமாக,
தொட்டில் முதல் கல்லறை வரை பயணிக்கும்,
இயற்கையின் தத்துவம் இச்சமூகத்தின் கட்டமைப்பு

நாடோடியே ஒற்றை உடலானாலும்,
நான்கும் நெஞ்சில் இணைந்தே வாழ்வதற்கு,
தர்மத்தின் தேர் இயல்பில் ஓட,
இரத்தம் போல் இயங்கி நம்மை வாழவைக்கும்.”

~ முனைவர் எ . இராமநாதன் ~

நம் இரத்தத்திலேயே வர்ணாசிரமம் இருப்பது தெரியாமல் நம்மிடையே சாதிச்சண்டை எதற்கு ? அவரவர் அவரவர்க்கு ஏற்ற அல்லது பிடித்த வேலையைப் பார்த்தாலே போதும்!

இயற்கையின் அடிப்படையில் மனித உடலில் உள்ள நான்கு முக்கிய அணுக்களையும் (சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டுக்கள், ஆக்சிஜன்) வர்ணாசிரமத்திற்கு ஒப்பிடலாம் .

  • சிவப்பணுக்கள் (RBC) ஊட்டச்சத்து மற்றும் உயிருக்கும், உடலுக்கும் தேவையான ஆற்றலை வழங்கும், இது வைசியர் சமுதாயத்தின் பொருளாதார பங்களிப்புகளை ஒத்தது.
  • வெள்ளையணுக்கள் (WBC) நோயெதிர்ப்பு திறனை வழங்கி உடலை பாதுகாக்கின்றன, இது ஷக்த்ரீயர்களின் பாதுகாப்பு பணியுடன் ஒப்பிடலாம்.
  • தட்டுகள் (Platelets) காயங்களை குணமாக்க உதவுகின்றன, இதைச் சூத்திரர்களின் சேவைக்கான பங்களிப்பாகக் காணலாம்.
  • ஆக்சிஜன் வாழ்க்கைக்கு ஆவசியமானது, பிரம்மச்சரியத்தைப் பிரதிபலிக்கின்றது, அப்படியே பிராமணர்கள் அறிவுத்துறையில் ஆன்மிகத்தோடும் பங்களிப்பதைக் குறிக்கிறது.

இந்த உவமையால், உடலும் சமூக அமைப்பும் ஒருங்கிணைந்த ஒன்றாக இருப்பதை உணர முடிகிறது. பிரித்து பணி செய்வது இயற்கை . ஒருங்கிணைந்து செயல்படுவது புத்திசாலித்தனம் .

சாதிப்பிரிவினையே வேண்டாம் என்ற சமூகம் ஏன் பள்ளிச்சான்றிதழில் OC / BC / MBC / SC / ST என்ற பாகுப்பாட்டையும் முன்னுரிமையையும் கொடுக்கவேண்டும் ?

செய்தொழில் மரபு வழியாக வந்தால் மேலும் மாட்சி பெரும் . இந்த அறிவு இல்லாததால் நம்மில் பலபேர் 40 வயதாகியும் எந்த வேலையிலும் நிரந்தமில்லாமலிருக்கிறோம் . அரசாங்க வேலையுடையவர்கள் கொரானா காலத்தில் கூட கவலையின்றி இருந்தனர் . பல தனியார் துறையிலிருந்தவர்கள் அக்காலத்தில் வேலையை இழந்து தவித்தது பலருக்குத் தெரியும் . இதனால்தான் நம் முன்னோர் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் , கவலையில்லை என்று ஒத்துக்கொள் என்றனர் .

மாணவ மணிகளே ! உங்களுக்கு என்ன வருகிறதோ , எது பிடிக்கிறதோ அதைச் செய்யுங்கள் . உங்கள் வேலை உங்கள் திறமை அடிப்படையில்தான் அமைகிறது . உங்கள் திறன் உங்கள் இரத்தத்திலேயே DNA வடிவத்தில் ஊறியிருக்கிறது என்பதை நம்புங்கள் . உங்கள் தாய் , தந்தைக்கு அல்லது பாட்டன் பாட்டிக்கு இருக்கும் திறன்கள் உங்களுக்கும் இருக்கும் . தற்காலத்திற்கேற்ப அந்த திறன்களை தொழில் திறமையாக உருவாக்க தக்க சான்றோர்களை அணுகுங்கள் .

சிலருக்கு உங்கள் திறன் வெளிப்புறமாகவே தெரியும் . உதாரணத்திற்கு, வீரம் , தைரியம் , போராடும் குணம் , நடிப்பு , நாட்டியம் , இசை , கவிதை , மேடைப் பேச்சு, தடகள போட்டியிடுதல் , எந்திரங்களை மற்றும் வாகனங்களை கையாளும் திறன் , வியாபாரச்சிந்தனை , வணிக தந்திரம் , உடல் அழகு , என்று எண்ணிலடங்கா திறமைகள் கொப்பளித்துக்கொண்டிருக்கும் . ஆனால் , அதனை நம் பெற்றோர்கள் புறக்கணித்து , உங்களுக்கு பிடிக்காத படிப்பிற்கு உங்களைத் தள்ளுவார்கள் .

பலருக்கு , தங்கள் திறன் உட்புறமாக இருக்கும் . அதனை அவர்களே அறியமாட்டார்கள். அவர்கள் நன்கு பழகிய நல்லாசானிடமோ அல்லது நன்கு கற்ற பெரியோர்களிடமோ பெற்றோர்களுடன் அணுகி ஆலோசனை பெறுதல் நல்லது .

உங்கள் பிள்ளைகளுக்கு என்ன படிப்பு சொல்லித்தருவது , எந்த தொழில் தேர்ந்தெடுப்பது என்று வெளியில் தேடாதீர்கள் . அந்த இரகசியம் உங்கள் குழந்தையின் DNA யில் உள்ளது . உங்கள் பிள்ளையை அழைத்து வாருங்கள் . உங்கள் மகனோ அல்லது மகளோ அவர்களின் திறன் என்பதை பெற்றோர்களாகிய நீங்களே சில பயிற்சிகளுக்குப் பிறகு எளிதாகத் தீர்மானிக்கலாம் .

மேலும் தகவல் பெற எனது வாட்ஸாப்ப் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்!