Uttamarseeli Venugopalaswamy Temple

உத்தமர்சீலி வேணுகோபாலஸ்வாமி கோயில்

உத்தமர்சீலி வேணுகோபாலஸ்வாமி கோயில் ஒரு பாரம்பரிய வைஷ்ணவக் கோவில், மஹா விஷ்ணுவும் அவரது மனைவி தாயாரும் இக்கோவிலில் கொலுவீற்றிருக்கிறார்கள் இது ஒரு மிகவும் பழமையான இந்து கோவில்.

இந்தக் கோவில் கல்லணைக்கு முன்பு அமைந்துள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணைக்கு செல்லும் பேருந்துகள் முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படுகின்றன. இந்தக் கோவில் மேலாவெட்டி பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ளது. நீங்கள் கோவில் பூசாரியை எப்போதும் அவருடைய செல் போனில் அழைக்கலாம். அவர் உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பார். இங்கு இருக்கும் சுவாமி வேணு கோபாலன் என்று அழைக்கப்படுகிறார், அதாவது கையில் புல்லாங்குழல் பிடித்த கண்ணன். மேலும், தாயார் அராவிந்த நாயகிக்கு தனித்த கோயில் உள்ளது. அனுமன் கோவில் இந்த கோவிலின் உள்ளே அமைந்துள்ளன.

ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி தேவியர் இருபுறமும் உடனிருக்க, திருவாயில் புல்லாங்குழல் ஏந்தி, புன்முறுவலுடன் வாசிக்கும் திருக்கோலத்தில் அழகு அருட்காட்சியளிக்கிறார். பேரழகாய் இன்முகத்துடன் காட்சிதரும் இத்தல பெருமாளுக்கு , ‘ஸ்ரீ செங்கனிவாய் பெருமாள்’ எனும் மற்றொரு திருநாமமும் உண்டு. தனி சன்னதியில், தாயார் ஸ்ரீ அரவிந்த நாயகி அமர்ந்திருக்கும் நிலையில் அருள்பாலிக்கிறாள்.

இத்திருக்கோவிலை, முற்காலத்தில் கட்டியவர் சோழ மன்னன் கரிகாலராம். இத்திருத்தலத்தில்தான் கரிகாலச்சோழர், மைத்ரேய மகரிஷியிடம் கல்லணை கட்டுவதற்கான ரகசியங்களை உபதேசமாக பெற்றதாக கூறப்படுகிறது. மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய வைணவத்திருக்கோயில் இதுவாகும். முதலாம் பராந்தக சோழரின் நான்கு புதல்வர்களில் ஒருவரான உத்தமசீலியின் பெயரால் இவ்வூர்,அக்காலத்தில் ‘உத்தமசீலி சதுர்வேதி மங்கலம்’என்றழைக்கப்பட்டு‌, பின் அப்பெயர் மருவி தற்போதைய ‘உத்தமசீலி’ என்றானது புதியதாக வீடு கட்டுவதற்கும், வீடு கட்டும் பணி பாதியில் நின்றிடாமல் முழுமையாக கட்டி முடிப்பதற்கும் உளமார வழிபடவேண்டிய கோவிலாகும்.

ஆலயம் தொழுவது சாலமும் நன்று . நன்றி