கற்களில் கல்விக் கதை.
ஒரு மனிதன் பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு அசரீரி அவருக்குச் சொன்னது, “சில கற்களை எடுத்து உங்கள் பை யில் வைத்துக்கொள்ளுங்கள், நாளை நீங்கள் மகிழ்ச்சியாகவும், வருத்தமாகவும் இருப்பீர்கள்.”
அந்த மனிதன் அந்த குரலைக் கேட்டார். அவர் குனிந்து, ஒரு கைநிறைய கற்களை எடுத்துக் கொண்டு தனது கையில் வைத்துக்கொண்டார். மறுநாள் காலை, அவர் தனது பையில் பார்த்தார், அங்கே வைரங்கள், மணிகள் மற்றும் முத்துக்கள் இருந்தன. அவர் மகிழ்ச்சியுமடைந்தார்; வருத்தமுமடைந்தார். மகிழ்ச்சியாக இருந்தார், சிலவற்றை எடுத்துக்கொண்டதற்காக! வருத்தமடைந்தார், இன்னும் அதிகம் எடுக்கவில்லை என்பதற்காக! கல்வியுடனும் இப்படி தான். இதைத்தான் கற்றது கை மண்ணளவு , கல்லாதது உலகளவு என்று இயம்பினார் நம் ஓளவை பாட்டி! இளமையில் நன்றாக படியுங்கள் மாணவர்களே!
Parables of the pebbles
A man was out walking in the desert when a voice said to him, “Pick up some pebbles and put them in your pocket, and tomorrow you will be both happy and sad.”
The man obeyed. He stooped down and picked up a handful of pebbles and put them in his pocket. The next morning he reached into his pocket and found diamonds and rubies and emeralds. And he was both happy and sad. Happy he had taken some – sad that he hadn’t taken more. And so it is with education.
Translate the above parable in Tamil.