Title: “Lakshmana’s Devotion”
Characters:
- Rama
- Lakshmana
- Sita
(Scene: Panchavati, on the banks of the Godavari river. Rama, Sita, and Lakshmana are present.)
Rama: (Reclining under a spreading tree) Lakshmana! Brother! Find a beautiful spot around here and build a charming cottage for us to stay in.
Lakshmana: (Falls at Rama’s feet) Tell me, Rama, what wrong have I done to deserve such a command?
Sita and Rama exchange surprised glances at Lakshmana’s reaction.
Rama: (Confused) Lakshmana, why are you so upset? Have I spoken harshly to you?
Lakshmana: (Closing his ears) Rama! I can’t bear to hear these words.
Rama: (Surprised) What’s the matter, Lakshmana?
Lakshmana: (With folded hands) Lord, there is no ‘I’ in me. My only possession is Sita and Rama. My wish is your wish, my will is your will. I am your devoted servant.
Lakshmana stands, sobbing aloud, expressing his inability to bear the thought of making choices.
Rama: (Consoling) Brother, your heart is pure. I used ordinary words; don’t take them to heart. Let’s go and choose together.
Rama, Sita, and Lakshmana move on. After some distance, Rama stops.
Rama: Erect the hut here!
Lakshmana: (Joyfully) I am blessed to carry out your commands.
Lakshmana falls at Rama’s feet, rises, and happily begins collecting materials for the hut.
Sita: (To Rama) Lakshmana’s devotion is truly admirable.
Rama: (Smiling) Yes, Sita. His dedication is genuine.
Sita: (Confessing to Rama) Life in the forest is more delightful with Lakshmana by our side.
When they see the hermitage, Sita praises Lakshmana for its beauty and simplicity.
Sita: Lakshmana, you’ve created a charming place. Thank you for your swift and skillful work.
The three of them enter the cottage, appreciating Lakshmana’s devotion and the peaceful setting.
தலைப்பு: “லக்ஷ்மண பக்தி”
இராம காதையில் நடந்த ஒவ்வொரு நிகழ் வுமே இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமான செய்தியைத் தருகிறது. ராமாயணத்தின் புனித காவியத்தில், பல ஆழமான ரகசியங்களும் உண்மைகளும் பொதிந்துள்ளன. கஷ்டங்கள் அல்லது மகிழ்ச்சிகள், துன்பங்கள் அல்லது இன்பங்கள் ஆகியவற்றின் முன்னிலையில் எவ்வாறு குழப்பமடையாமல் இருக்க வேண்டும் என்பதை ராமர் உலகிற்குக் கற்றுக் கொடுத்தார். எந்த விமர்சனத்திற்கும் புன்னகையுடன் பதிலளித்தார். அவர் புகழுக்காகப் பெருமிதம் கொள்ளவில்லை. இவ்வாறு, அவர் வெற்றி அல்லது தோல்வி, ஆதாயம் அல்லது இழப்பு ஆகியவற்றில் முழு சமநிலையை வெளிப்படுத்தினார் – இது ஒவ்வொருவரும் வளர்க்க வேண்டிய அணுகுமுறை. இராமன் மட்டுமல்ல , இராமகாதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளனர். இந்த வரிசையில் லக்ஷ்மணன் பக்தி பற்றி நாம் சிறிது நேரத்தில் பார்ப்போம்.
பாத்திரங்கள்:
- ராமா
- லக்ஷ்மணா
- சீதா
(காட்சி: பஞ்சவடி, கோதாவரி நதிக்கரையில். ராமர், சீதை, லக்ஷ்மணர் உள்ளனர்.)
இராமர்: (பரந்து நிற்கும் மரத்தடியில் சாய்ந்து) தம்பி லக்ஷ்மணா! இங்கே ஒரு அழகான இடத்தைக் கண்டுபிடித்து, நாங்கள் தங்குவதற்கு ஒரு அழகான குடிசையை உன் விருப்பப்படி உருவாக்கு.
லக்ஷ்மணன்: அண்ணா, நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என்னை கொடுமையான சொல்லால் தண்டிக்கிறீர்கள்.” என்று கூறி அழுது ராமர் காலில் விழுந்தான்.
சீதையும் ராமரும் லட்சுமணனின் எதிர்வினையைப் பார்த்து ஆச்சரியமான பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ராமன் : (குழப்பத்துடன்) லக்ஷ்மணா, நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறாய்? நான் உன்னிடம் கடுமையாகப் பேசினேனா?
லக்ஷ்மணன்: (செவிகளை மூடிக்கொண்டு) ராமா! இந்த வார்த்தைகளைக் கேட்க என்னால் தாங்க முடியவில்லை.
ராமனுக்கும் புரியவில்லை, ராமன் : (வியப்புடன்) என்ன விஷயம் லக்ஷ்மணா? என் அழுகிறாய் . நான் உன்னைத் தவறாக பேசவில்லையே!
லக்ஷ்மணன்: (கூப்பிய கைகளுடன்) அண்ணா , என்னுள் ‘நான்’ என்ற எண்ணமே என்றுமே இல்லையே . என்னுடைய ஒரே சொத்து சீதையும் ராமனும் மட்டுமே. என்றுமே உங்கள் விருப்பம்தான், என் விருப்பம். எனக்கு என்று எந்த தனி விருப்பமே கிடையாது. நான் உங்களுடைய அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன். இவ்வாறிருக்க, எப்படி நீங்கள் என் விருப்பப்படி என்று கூறினீர்கள், என்று அழுது புலம்பினான்.
இராமன்: (ஆறுதல்) தம்பி, உன் உள்ளம் மிகவும் தூய்மையானதப்பா. நான் சாதாரணகத்தான் உன் விருப்பப்படி என்று கூறினேன். அவற்றை மனதில் கொள்ளாதே. நாம் மூவரும் ஒன்றாகவே சென்று நாம் தங்குதற்குரிய இடத்தை தேர்வு செய்யலாம், வா. சீதா, நீயும் வா” என்று இவ்வாறாக கூறிவிட்டு சிறிது தூரம் சென்றதும் இராமன் நின்றான்.
இராமன்: இங்கே குடிலை எழுப்பு லக்ஷ்மணா ! என்றார்.
லக்ஷ்மணன்: (மகிழ்ச்சியுடன்) அப்பா! இப்போதுதான் எனக்கு நிம்மதி. உமது கட்டளைகளை நிறைவேற்றும் பாக்கியம் பெற்றேன்.
லட்சுமணன் ராமரின் காலில் விழுந்து, எழுந்து, மகிழ்ச்சியுடன் குடிசைக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கத் தொடங்குகிறான்.
சீதா: (ராமனிடம்) லக்ஷ்மணனின் பக்தி உண்மையிலேயே போற்றத்தக்கது, ஸ்வாமி என்றாள் .
இராமன்: (சிரித்து) ஆம், சீதா. அவனுடைய அர்ப்பணிப்பு மிகவும் உண்மையானது.
சீதை: (ராமனிடம் ) நம் பக்கத்தில் லட்சுமணன் இருக்கும்போது நமக்கென்ன கவலை? அரண்மனையை விட இந்த காட்டில் வாழ்வது மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது, என்றாள் .
இதற்கிடையே லக்ஷ்மணன் ஒரு அழகான எளிமையான குடிலை உருவாகிவிட்டான்.
சீதா: லக்ஷ்மணா, அழகான இடத்தை உருவாக்கி விட்டாய். உங்கள் விரைவான மற்றும் திறமையான பணிக்கு என் மனமார்ந்த நன்றி, என்று பாராட்ட்டினாள்.
இராமரும், சீதையும் லட்சுமணனின் பக்தி மற்றும் அற்புதமான கைத்திறமையை பாராட்டி, அமைதியான மற்றும் அழகான குடிசைக்குள் நுழைகின்றனர்.