A story unfolds in the ancient city of Hastinapuram when Dharmaraja invited Lord Sri Krishna for lunch on Duvadasi. Will our Duryodhana not take advantage of this opportunity!?
However, Krishna imposed a condition. He declares that whoever cooks a meal with 108 nutrients-based vegetables and is ready to host Duvadasi, I will eat at their house. This is Krishna Leela!
Duryodhana added 105 vegetables with great difficulty. But he struggled to find the last three vegetables. In contrast, Dharmaraja sat in a quiet place and meditated deeply, understanding very well the meaning of Krishna’s condition. Accordingly, he kept calm and remained confident in the unfolding events.
On Duvadasi, Krishna went to Duryodhana’s incomplete feast. Pointing out to Duryodhana that the 108 varieties were not there as he had claimed, he decided to investigate Dharmaraja’s abode. There, he found a peaceful atmosphere and meticulously prepared food.
He came out after having dinner at Dharmarajan’s house. At the door, Duryodhana, with his drooping face, asks Krishna, Have you partaken of Dharmaraja’s feast? He jokingly asked if he would eat 108 vegetables. Then Krishna let out a good belch and exclaimed , “what a wonderful feast!” “Dharmarajan really surprised me” , said with a smile, and expressed the significance of the simple, yet divine meal he ate.
Duryodhana, I just told you vegetalbes containing 108 nutritious values. But you got it wrong as 108 vegetables. What can I do? But Dharmarajan understood my point very well and praised the feast he gave with the rice with ginger chutney which has 38 different nutrients and a nutrient rich spinach which has 70 different nutrients.
This Duvadasi story will teach you a good thing about promoting right food at right time for a healthy life.
Delicious ginger, rice, and the home-healing spinach, hailed as the “King of Green Leaves,” it’s a pity that despite these simple foods, we don’t see their countless health benefits. We believe the hype of superfoods. But we don’t realize the importance of taking our traditional green leaves on time.
This story tells us that food is medicine. Otherwise, dear ones, medicine becomes our daily food! Be careful. Do not enslave our tongues to fake food and make our body goes numb! Thanks.
துவாதசியின் கதை
பண்டைய நகரமான ஹஸ்தினாபுரத்தில், தர்மராஜா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை துவாதசி அன்று மதிய உணவுக்கு அழைத்தபோது ஒரு கதை வெளிப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை நம் துரியோதனன் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பானா!? ஏனெனில் கிருஷ்ணர் போன்ற ஞானிகள் மற்றும் சாதுக்கள் துவாதசி தினத்தன்று ஒருவரது இல்லத்தில் சாப்பிட்டால், வேண்டிய வரம் கிடைக்கும். இந்தப் போரை நாம் எளிதில், வென்றுவிடலாம் என்று அவன் குறுக்குப்புத்தி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. உடனே கிருஷ்ணருக்கு, தன் அழைப்பை விடுத்தான்.
இருப்பினும், கிருஷ்ணர் ஒரு நிபந்தனை விதித்தார். யாரொருவர் 108 ஊட்டச்சத்துக்கள் அடிப்படையிலான காய்கறிகளுடன் கூடிய உணவு சமைத்து , துவாதசி விருந்தளிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களோ அவர்கள் இல்லத்தில் நான் சாப்பிடுவேன் என்று அறிவித்தார். இதைத்தான் கிருஷ்ண லீலை என்பது!
துரியோதனன், 105 காய்கறிகளை வெகு சிரமப்பட்டு சேர்த்துவிட்டான் . ஆனால், கடைசி மூன்று காய்கறிகளைக் கண்டுபிடிக்க போராடினான். இதற்கு நேர்மாறாக, தர்மராஜா ஒரு அமைதியான இடத்திலமர்ந்து ஆழ்ந்து யோசித்து, கிருஷ்ணர் சொன்ன நிபந்தனையில் இருந்த உட்கருத்தை நன்றாகவே புரிந்துகொண்டார். அதன்படி, அமைதியைக் கடைப்பிடித்தார், வெளிவரும் நிகழ்வுகளில் நம்பிக்கையுடன் இருந்தார்.
துவாதசி அன்று, கிருஷ்ணர் துரியோதனனின் முழுமையடையாத விருந்துக்குச் சென்றார். அவர் கூறியபடி 108 வகையறாக்கள் அங்கு இல்லை என்பதை துரியோதனனுக்கு சுட்டிக்காட்டிவிட்டு, நேரே தர்மராஜாவின் இருப்பிடத்தை ஆராய முடிவு செய்தார். அங்கு, அமைதியான சூழ்நிலையையும், உன்னிப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட உணவையும் கண்டுபிடித்தார்.
தர்மராஜன் இல்லத்தில் உணவருந்திவிட்டு வெளியே வந்தார். வாசலில், தன் தொங்கிப்போன முகத்துடன் துரியோதனன், கிருஷ்ணனிடம் தர்மராஜர் விருந்தில் நீங்கள் பங்குகொண்டீர்களாமே? அதில் 108 காய்கறிகளை சாப்பீட்டீர்களா என்று கேலியுடன் வினவினான். அப்போது, கிருஷ்ணர், நன்றாக ஒரு ஏப்பம் விட்டுவிட்டு என்ன ஒரு அருமையான விருந்து. தர்மராஜன் அசத்திவிட்டானப்பா, என்று புன்னகையுடன் கூறிவிட்டு, அவர் சாப்பிட்ட அந்த எளிமையான அதே சமயம் தெய்வீக உணவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.
துரியோதனா , நான் உனக்கு 108 சத்துக்களுடன் கூடிய காய்கறிகளைத் தான் சொன்னேன். ஆனால் நீயோ, 108 காய்கறிகள் என்று தவறாக புரிந்து கொண்டாய். ஆனால், தர்மனோ, நான் சொன்னதின் அர்த்தத்தை நன்றாக புரிந்துகொண்டு, 38 விதமான சத்துக்களுடன் உள்ள இஞ்சி சட்னியுடன் கூடிய சாதம் மற்றும் 70 விதமான சத்துக்கள் கொண்ட ஒரு ஊட்டச்சத்து நிறைந்த அகத்திக்கீரையின் அருமை பெருமையை பற்றிக்கூறினார்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான நேரத்தில் சரியான உணவை ஊக்குவிப்பதற்கான இந்த துவாதசி கதை உங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை புரியவைத்திருக்கும்.
அருமையான இஞ்சி, சாதம், “பச்சை இலைகளின் ராஜா” என்று போற்றப்படும் அகம் நோய் தீர்க்கும் அகத்தி கீரை, இந்த எளிய உணவுகள் கிடைத்தாலும், அவைகளது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை நாம் கண்டுகொள்வதில்லை என்பது வருந்தத்தக்கது. சூப்பர்ஃபுட்களின் கவர்ச்சியான விளம்பரத்தை நம்புகின்றோம். ஆனால், நம் பாரம்பரிய பச்சை இலைகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதின் முக்கியத்துவத்தை நாம் உணரவில்லை.
இந்த கதை உணவே மருந்து நமக்கு நன்றாகவே உணர்த்துகிறது. இல்லையேல், மருந்தே, நம் அன்றாட உணவாகிவிடும் அன்பர்களே! உஷார். போலி உணவிற்கு நாக்கை அடிமையாக்கிவிட்டு நம் யாக்கையை வலிவிழக்கச் செய்துவிடாதீர்கள்! நன்றி.