Sri Rudhra Ekadashini is the most appropriate Homam to solve today’s problems. It was held at Saitech Informatics on 19th August 2023 with the Sri Ganesha Puja.
Benefits of conducting the Ancient Sri Rudhra Ekadashini:
- Invokes Lord Shiva’s Blessings
- Removes obstacles from negative karmas
- Purifies the mind and soul
- Pushtivardhanam: gives material wealth
- Suganthi: provides spiritual liberation
- Thryambaka: the third energy to ensure righteousness
- Conquers troubles and fears
- Increases auspiciousness
- Solve relationship issues
- Maintain harmony at home and work
ஸ்ரீ ருத்ர ஏகாதஸினீ என்பது மஹா பிராயஸ்சித்த கர்மாவாகும்.. மிகவும் விசேஷமானது. கர்மாக்களுக்கு அங்கமாக அல்லாமல் தனியாகவும், எப்போது நினைத்தாலும், ஒருவர் செய்து கொள்ளலாம்
குறைந்தது 11 ருத்விக்குகள் (வைதீகர்கள்) ஸ்ரீ ருத்ர ஜபத்திற்கு தேவை. ஹோம சமயத்தில் 12 பேர் தேவைப்படும். தம்பதிகளுக்கு விஸ்தாரமான சங்கல்பம் செய்து வைக்கப்படும்.. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அப்யுதயம், புண்யாஹவாசனம், தானாதிகள் முதலியவைகள் உண்டு.
கலச ஸ்தாபணம் : 12 சிறிய கலசங்களும் ஒரு ப்ரதான (பெரிய) கலசமும் தேவைப்படும். கலசங்களில் ஜலத்தை நிரப்பி அலங்காரம் செய்து ஒவ்வொரு கலசத்திலும் ஒவ்வொரு தேவதா மூர்த்தி (பரமேஸ்வரின் அம்ஸம்) ஆவாஹநம் செய்யப்படும்.
ஆவாஹநம் செய்யப்படும் பெயர்கள்:
- சாம்ப-பரமேஸ்வரர்
- மஹாதேவர்
- சிவம்
- ருத்ரம்
- சங்கரம்
- நீலலோஹிதம்
- ஈசாநம்
- விஜயம்
- பீமம்
- தேவதேவம்
- பவோத்பவம்
தேவாதா மூர்த்திகளை 11 கலசங்கள் ஒவ்வொன்றிலும் ஆவாஹநம் செய்வார்கள். பிரதான கலசத்தில் ஆதித்யாத்மக ஸ்ரீ ருத்ரம் ஆவாஹநம் செய்யப்படும். மீதி இருக்கும் ஒரு சிறிய கலசம் புண்யாஹவாசந கலசமாகும். மஹந்யாஸத்துடன் கர்மா துவங்கும்.
மஹந்யாஸத்தில் ஷோடஸாங்க ரெளத்ரீகரணம், ஷடாங்க ந்யாஸம், சிவ சங்கல்பம், ஆத்ம ரக்ஷா, புருஷ சூக்த பாராயணம், தொடர்ந்து அப்ரதிரத: போன்ற சில வேத மந்த்ரங்கள், 8 தடவை அனைவரும் நமஸ்காரம் செய்தல், கலச தேவதைகளுக்கு ஷோடஸ உபசாரங்கள், த்ரிசதி அர்ச்சனை, பதின்மூன்று நமஸ்காரங்கள், அனைவரும் சேர்ந்து த்யான ஸ்லோகம் சொல்லுதல், சமக மந்த்ரங்களுடன் பிரார்த்தனை, புஷ்பாஞ்சலி, ப்ரதக்ஷிண நமஸ்காரம் போன்றவைகள் பல இடம் பெறும்.
பிறகு 11 தடவை ஸ்ரீ ருத்ர ஜபம்.
அதே சமயத்தில் ஸ்வாமிக்கு, பஞ்சாயதன மூர்த்திகளுக்கு, 11 த்ரவ்யங்கள் மூலம் வரிசை க்ரமமாக அபிஷேகம் யாராவது ஒருவர் செய்வார்.
தொடர்ந்து 12 ருத்விஜர்களுடன் ருத்ர ஹோமம் – ஹோம இறுதியில் வஸோர்தார ஹோமம்.
கலசங்களுடன் தக்ஷிணையை சேர்த்து வைதீகாளுக்கு சம்பாவனையாக அளித்து ஆசி பெறுதல். ஹாரத்தியுடன் மங்களகரமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
Priests: Sri. Mohan, Sri. Pazhani and his team
60 Years old Couple:
Dr E. Ramanathan & Mrs. R. Kothai
Son & Daughter-in-law: Sri. R. Sainath & Srimathi. Harini
Grand Daughter: S. Daksha
In the presence of Sri. Velumurugan, Smt. Pushkala
Saitechies: Selvi. Pavani, Selvi. Dharshini, Selvi. Jahnavi
கலசங்களை யதாஸ்தானம் செய்து அந்த ஜலத்தை வைதீகாள் மூலம் தம்பதிகளுக்கு அபிஷேகம் செய்வித்தல்.
கலசங்களுடன் தக்ஷிணையை சேர்த்து வைதீகாளுக்கு சம்பாவனையாக அளித்து ஆசி பெறுதல்.
We are benefitted from this ancient auspicious homam! Do you want to conduct such an auspicious homam at your home? Please contact Dr E. Ramanathan to organise the best qualified team of priests. WhatsApp: 9444929163