A Smart Mom seeking Admission into NEET Coaching for her Baby

தான் தோற்றாலும் தன் பிள்ளையை வைத்து தான் கோட்டை விட்ட கனவை நினைவாக்குவேன் என்ற சபதம் ஏற்றுள்ள தாயின் வெறித்தனமான முயற்சிகள்.

Principal Room


புத்திசாலி தாய்:
ஐயா! என் குழந்தைக்குஇரண்டு வருடங்கள் ஆகிறது. என் குழந்தையை எப்போது நீட் பயிற்சியில் சேர அனுமதி தருவீர்கள்?
நீட் மற்றும் ஐஐடி கோச்சிங் ஒருங்கிணைந்த பள்ளி முதல்வர்:
அடடா! தாமதமாக வந்துவிட்டீர்கள்! அவன் பிறந்த அன்றே அதில் சேர்ந்திருக்க வேண்டும். பரவாயில்லை! இப்போது நீங்கள் மற்றொரு குழந்தையை நம்பலாம். ஒரு வேளை உங்களுக்கு புதிய குழந்தை பிறக்க வாய்ப்பு இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

  • கர்ப்ப காலத்தில், நீங்கள் இணையத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களின் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதத்தின் அனைத்து பக்கங்களையும் சாப்பிட வேண்டும்! குறிப்பாக NCERT, RS Aggarwaal, HC Verma, RD Sharma,.etc.

புத்திசாலி தாய்:
ஐயா! நீட் மெடிக்கல் கோச்சிங்க்கு எதுக்கு மத்தமட்டிக்ஸ் ?
பள்ளி முதல்வர்:
எல்லாம் ஒரு சேப்டிக்குத்தான் ! நீட் கிடைக்கவில்லை என்றால் ஐஐடி ! குறுக்கே பேசாதீர்கள்!

  • உங்கள் கணவர் ரொட்டியில் அனைத்து சூத்திரங்களையும் எழுதி சாப்பிட வேண்டும்.
  • வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் சுவர்களில் சூத்திரங்கள் மற்றும் முக்கிய குறிப்புகள் எழுதி பயிற்சி செய்ய வேண்டும்.
  • நீங்கள் தினமும் 20-22 மணி நேரம் எங்கள் பள்ளி ஆசிரியர்களின் ஆன்லைன் விரிவுரைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
  • உங்கள் குழந்தை சரியாக கவனம் செலுத்தும் வகையில், மாதத்திற்கு ஒருமுறை உங்கள் வீட்டில் பூஜை செய்ய பண்டிதரை அழைக்கவும்.
  • உங்கள் அண்டை வீட்டாரும் தங்கள் குழந்தைகளை ஐஐடியில் சேர்க்க விரும்புகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் உங்கள் குழந்தைக்கு நல்ல போட்டி மனப்பான்மை வளரும்.
  • உங்கள் குழந்தையின் ஆற்றலைப் பெருக்க எந்த வகையான மனித மற்றும் மின்னணு தொடர்பு அனுமதிக்கக்கூடாது.
  • குழந்தையை யாரிடமும் பழக விடக்கூடாது. வேண்டுமானால் வீட்டைச்சுற்றி காரீயத்தில் செய்யப்பட்ட சுவரை கட்டிக்கொள்ளலாம்.
  • குறிப்பாக, எங்கள் பள்ளிக்கும் உங்கள் வீட்டிற்கும் ஒரு சுரங்கப்பாதை அமைத்துக்கொள்ளலாம். நாங்களே இதனை செய்து தருவோம். அத்துடன் எங்களுடைய அதிவேக புல்லட் ட்ரெயின் வசதியை நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அனைத்தும் free !
  • ஒரே பீஸ் தான்!
    புத்திசாலி தாய்:
    ஓகே. எவ்வளவு பீஸ் ?
    பள்ளி முதல்வர்:
    உங்கள் பிள்ளை உங்கள் சொத்து!
    உங்கள் சொத்து எங்கள் சொத்து! அவ்வளவுதான்!
  • உங்கள் குழந்தையின் சேர்க்கை எங்கள் பள்ளியில் பெற முடிந்தால், அவருக்கு பரம்வீர் சக்ரா, பாரத ரத்னா, நோபல் பரிசு வழங்கப்படும் மற்றும் கின்னஸ் புத்தகத்தில் அவரது பெயர் இடம்பெறும்.
  • உங்கள் குழந்தையின் நேர்காணலைப் பெறுவதற்கு ஊடக சேனல்கள், செய்தித்தாள்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களைக் கையாளவும் தயாராக இருங்கள்.
  • இப்பொழுதே உங்கள் சொத்து பத்திரங்களை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு புக்கிங் செய்து கொள்ளுங்கள். எண்ணி பத்துமாதங்களில், வரப்போகும் குழந்தைக்கு அட்மிஷன் போட்டுவிடலாம். சீக்கிரம்! சீக்கிரம்!!!

Reference

https://www.quora.com/My-baby-is-2-months-old-When-should-I-let-him-join-IIT/answer/Raj-4020?ch=15&oid=233754044&share=d9e8a822&srid=hFNNx&target_type=answer