ப்ளூ லகூன்

ப்ளூ லகூன் சென்னைவாசிகளுக்கு ஏற்ற ஒரு அருமையான கடற்கரையோர பொழுதுபோக்கிடம். பொங்கல் அன்று மறுநாள் நாங்கள் குடும்பத்தோடு சென்று மகிழ்ந்தோம். அமைதியான மரத்தடி. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நீச்சல் குளம், செயற்கை அருவி, ஓய்வறைகள், உணவுக்கூடம், இப்படி ஏராளமான வசதிகள்.

ஆர்ப்பாட்டமில்லாத கடற்கரை. கார்ப்பொரேட் கூட்டத்திற்கு தேவையான அணைத்து வசதிகளும் கடற்கரைக்கருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரையில் குடும்பத்தோடு நடக்கலாம், ஓடலாம், விளையாடலாம். இருப்பினும் கடல் உள்ளே செல்ல வேண்டாம். மறக்காமல் நல்ல கூலிங்கிளாஸ் வாங்கிச்செல்லுங்கள்.

பறவைகளின் ஒலி ஒரு ஆனந்தமயமான மற்றும் ஆரோக்கியமான இயற்கை சூழலை உருவாக்குகிறது.
குடும்பத்தோடு பொங்கல் மறுதினம் சென்று நன்றாக கண்டு களித்தோம்.

நீங்களும் ஒருமுறை சென்று வரலாமே!! நல்ல ஒரு ஹெட் போன் எடுத்துச்செல்லுங்கள்